சுத்த சன்மார்க்க சபை சார்பில்வள்ளலார் ஜோதி ரத யாத்திரைநாமகிரிப்பேட்டை: பொள்ளச்சி அடுத்த சமத்துார் ராமலிங்கர் அறக்கட்டளை சமரச சுத்த சன்மார்க் சத்தி சங்கம் சார்பில், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், சமத்துாரில் இருந்து வடலுார் ராமலிங்க அடிகளார் கோவில் வரை, சுத்த சன்மார்க்க சபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்தனர். ரதத்தில் ஜோதி ஏற்றி ஒவ்வொரு கிராமமாக சென்று, சுத்த சன்மார்க்க சபை குறித்து பேசி வருகின்றனர்.இந்தக்குழு, நேற்று இரவு, நாமகிரிப்பேட்டை வழியாக ஆத்துார் சென்றனர். முன்னதாக, நாமகிரிப்பேட்டை வந்த ரதத்திற்கு ராஜேஸ்வர், பொன்மலை, சங்கர், சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். இந்த குழு, இன்று ஆத்துார் செல்கிறது. அங்கிருந்து தைப்பூச தினத்திற்குள் வடலுார் செல்லவும் திட்டமிட்டுள்ளது.பெருமாள் கோவிலில்கூடாரவல்லி விழாமோகனுார்,: மோகனுார் காவிரி ஆற்றங்கரையோரம், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கூடாரவல்லி விழா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலையில் பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஆண்டாள், பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இந்த பூகூடாரத்தில், பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபடுபவருக்கு திருமண தடைகள் விலகி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.தே.மு.தி.க., மவுன ஊர்வலம்திருச்செங்கோடு: மறைந்த நடிகர் விஜயகாந்த்தின், 16ம் நாள் நினைவு தினத்தையொட்டி, திருச்செங்கோட்டில், நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு, அனைத்து கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் இந்திய தேசிய காங்., தமிழ் மாநில காங்.,- கம்யூ., - பா.ஜ., - தே.மு.தி.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.