உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய இயற்கை மருத்துவ தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தேசிய இயற்கை மருத்துவ தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், தேசிய இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, அரசு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் நடந்தது.நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள, பழைய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பழைய மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் துவங்கிய பேரணி, மோகனுார் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் வழியாக சென்று மீண்டும் துங்கிய இடத்தில் முடிந்தது.பேரணியில், இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. அரசு இயற்கை மருத்துவர் செந்தில்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஸ்கண்ணன், உதவி சித்த மருத்துவர் தமிழ்செல்வன், கோகுல்நாதா மிஷன் இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மாதையன், டாக்டர் விஜயலட்சுமி, மாணவ, மாணவியர் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை