உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் நவ சண்டி யாக வழிபாடு

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் நவ சண்டி யாக வழிபாடு

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையத்தில், வடபத்திரகாளியம்மன் கோவிலில் நவ சண்டி யாகம் நடந்தது.ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் வடபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாதாள வராகி அம்மன், பிரத்தியங்கிராதேவி மற்றும் காளி ஈஸ்வரமூர்த்தி ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நவ சண்டி யாக பெருவிழா நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் துவங்கியது. மாலை, 4:00 மணியளவில் பூர்வாங்க பூஜைகளுடன் மகா நவ சண்டி யாகம், லலிதா சகஸ்ரநாமம், தீபாராதனை மற்றும் 64 யோகினி பலி, பைரவ பலி ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.புத்தாண்டான நேற்று காலை, 5:00 மணியளவில் மகா நவ சண்டி யாக பெருவிழா, 13 அத்தியாய ஹோமம் நடந்தது. மதியம், 1:00 மணியளவில் கடம் புறப்பாடு, அன்னைக்கு மகா அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் அம்மன் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை