உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

சேந்தமங்கலம் பள்ளிமாணவர்கள் களப்பயணம்தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளாண் அறிவியல் துறை சேர்ந்த மாணவர்கள், நாமகிரிபேட்டை வட்டாரத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் களப்பயணம் மேற்கொண்டனர்.மாணவர்களுக்கு நிறுவனர் அசோக்குமார் இயற்கை விவசாயம், உயிர் உரங்கள் தயாரித்தல், பல்வேறு வகையான வேளாண்மை சேர்ந்த தகவல்களை வழங்கினார். களப்பயணத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன், தொழிற்கல்வி ஆசிரியர் எழில், தமிழ் ஆசிரியர் நாகராஜ், தொழிற்கல்வி பயிற்றுனர்கள் ராஜா, ஜெகன் பங்கேற்றனர்.டூவீலர்கள் மோதல்: மூவர் படுகாயம்குமாரபாளையத்தில், டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசித்து வருபவர் கேசவன், 28. சிவில் இன்ஜினியர். தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 8:45 மணியளவில், பஜாஜ் பிளாட்டினா பைக்கில் பின்னால் மனைவி சவுமியாவை, 28, உட்கார வைத்துகொண்டு, சேலம் சாலையில் ராஜம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஸ்பிளண்டர் பைக் ஓட்டி வந்தவர், இவர்கள் வந்த பைக் மீது மோதியதில், மூவரும் படுகாயமடைந்தனர்.கேசவன், சவுமியா இருவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கு காரணமான, சேலத்தை சேர்ந்த கார்மென்ட்ஸ் கூலித்தொழிலாளி மவுனேஷ், 18, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் அருகே மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டிநாமக்கல் அடுத்த துாசூரில், மாநில அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடந்து வருகிறது.நாமக்கல் அடுத்த, துாசூரில் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 26-வது ஆண்டு போட்டிகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழக பொருளாளர் அருணகிரி தொடங்கி வைத்தார். இதில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி, சென்னை டாக்டர் சிவந்தி கிளப், ஆத்துார் பாரதி பள்ளி, சென்னை மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன், சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகம், கேரளா சென்ட் சேவியர்ஸ் கல்லுாரி, சென்னை பனிமலர் இன்ஜினியரிங் கல்லுாரி, சேலம் புனித மேரி ஏ.என். மங்களம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு, 25 ஆயிரம் ரூபாய், 2-ம் பரிசு 20 ஆயிரம், மூன்றாம் பரிசு, 15 ஆயிரம், 4ம் பரிசு 10 ஆயிரம், 5ம் பரிசு 5,000, 6ஆம் பரிசு 3,000 ரூபாய் வழங்கப்படும் என, நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழக இணை செயலாளர் கனகராஜ் கூறினார். மல்லசமுத்திரத்தில்பொங்கல் விழாமல்லசமுத்திரம், சந்தைப்பேட்டை திடலில் நேற்று பொங்கல் விழா கொண்டாட்டமாக சிலம்பாட்டம் நடந்தது.நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் போட்டியை துவக்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை முன்னிலை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.மாட்டு பொங்கலையொட்டி கோலப்போட்டிமாட்டு பொங்கலை ஒட்டி, நாமகிரிப்பேட்டை இரட்டை மாரியம்மன் கோவிலில் கோலப்போட்டி நடந்தது. 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் காமாட்சி விளக்கு வழங்கப்பட்டது. சி.பி.எம்., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், சசிகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊர் காரைக்காரர்கள் முத்து, சுப்பிரமணி, பிரகாஷ், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோல், நாமகிரிப்பேட்டை ஆதிசங்கர் சமூக நல அறக்கட்டளை, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் சார்பில், வெள்ளக்கல்பட்டியில் கோலப்போட்டி, உறுப்பினர் சேர்க்கை நடந்தது. கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறுவன தலைவர் சிவலிங்கம் தலைமையில், மாநில செயலாளர் குமார், மாநில பொருளாளர் ரவி, மாநில துணை தலைவர் காசிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின், முதியவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில்16வது ஆண்டு விழா கோலாகலம்குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில், 16வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.குமாரபாளையம் அருகே, ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில், 16வது ஆண்டு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி செயலர் முருகேசன், பொருளாளர் கவிதா, முதல்வர் ராஜஸ்ரீ உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. நவக்கிரக நாயகிகள் நாடகம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்திய நடனம் மட்டுமின்றி, மேற்கத்திய நடனமும் ஆடி அசத்தினர். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.திருச்செங்கோட்டில் நவீனஜல்லிக்கட்டு போட்டிதிருச்செங்கோட்டில், நந்தவனத் தெருவில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, புதுமையான விளையாட்டு போட்டி பெண்கள், குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.தைப்பொங்கல் திருநாளை ஒட்டி, பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதே போல பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்ளும் வகையில், நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கோழி பிடி விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டியில், கண்களை கட்டி ஒரு காலில் கயிற்றின் ஒரு முனையையும், மற்றொரு முனையை கோழியின் கால்களிலும் கட்டிவிடுவர். விதிமுறைகளுக்கு உட்பட்டு கோழியை கைகளால் பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இ.கம்யூ., சார்பில்பொங்கல் விழா குமாரபாளையம் இ.கம்யூ., சார்பில் கொடியேற்று விழா, பொங்கல் விழா, நகர செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது. கட்சிக்கொடியை, மாவட்டக்குழு உறுப்பினர் மனோகரன் ஏற்றி வைத்தார். மூத்த நிர்வாகிகள் ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் மனோகரன் பேசுகையில், ''உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்நாளில் மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம்,'' என்றார்.இதையடுத்து, உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, நகர துணை செயலாளர் விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.லயன்ஸ் சங்க நிறுவனர் பிறந்தநாள்இலவச வேட்டி, சேலை வழங்கல்லயன்ஸ் கிளப் தோற்றுவித்த மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாளையொட்டி, குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகள் தலா இரண்டு செட் வழங்கியதுடன், அன்னதானம் மற்றும் ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.லயன்ஸ் கிளப் தோற்றுவித்த மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா, குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகள் தலா இரண்டு செட் வழங்கியதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.சிறப்பாளராக பங்கேற்ற சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலலிதா, முதியவர்களுக்கு வேட்டி, சர்ட், சேலைகள் வழங்கினார். நித்யபிரபா என்ற ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், சங்கத் தலைவர் மாதேஸ்வரன், சங்க செயலாளர் கதிர்வேல், பொருளாளர் செல்லவேல், முன்னாள் பொருளாளர் தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேசன் திறப்பு விழாநாமக்கல், -சேந்தமங்கலம் சாலை, ரயில்வே ஸ்டேஷன் அருகே கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேசன் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., சின்ராஜ் அலுவலக கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பாளராக எம்.எல்.ஏ., ராமலிங்கம் பேசினார். தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கலி சுப்ரமணியம், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் அன்பழகன், துணைத்தலைவர் சக்திவேல், துணை செய்லாளர் மாதையன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி