உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் மின் தடை ரத்து

நாமக்கல்லில் மின் தடை ரத்து

நாமக்கல் : நாமக்கல் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை, நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் துணை மின் நிலையத்தில் இன்று (ஜூன் 20) பராமரிப்பு பணி நடப்பதால், நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, துாசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ., காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணத்தால், இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை