உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உறவினர்கள் வராததால் கரூரில் காத்திருக்கும் ராமர் பாண்டி உடல்

உறவினர்கள் வராததால் கரூரில் காத்திருக்கும் ராமர் பாண்டி உடல்

கரூர்: அரவக்குறிச்சி அருகே, கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியின் உடலை, நேற்றும் உறவினர்கள் வாங்க வரவில்லை.மதுரை மாவட்டம், அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 38; தேவேந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர். இவர் கடந்த, 19ல் கரூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு, மதுரைக்கு செல்லும் வழியில், அரவக்குறிச்சி அருகே, தேரப்பாடி பிரிவு பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.ராமர் பாண்டி உடல் கடந்த, ஆறு நாட்களாக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த தர்மா, 25, உள்பட ஐந்து பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, ராமர் பாண்டி உடலை வாங்க அவரது உறவினர்கள் மதுரையில் இருந்து, ஆறாவது நாளாக நேற்று மாலை வரை வரவில்லை. இதனால், ராமர் பாண்டியின் உடல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ