உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டம்

எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், எஸ்.ஐ.ஆர்., சம்பந்த-மான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், எஸ்.ஐ.ஆர்., ஆலோ-சனை கூட்டம் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில், நேற்று இரவு, 10:00 மணிக்கு நடந்தது. இதில், எஸ்.ஐ.ஆர்., படிவம் கொடுத்தவர்களிடம், விரைவில் பூர்த்தி செய்த படிவமாக பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த பணியை விரைந்து செய்ய வேண்டும் என, தாசில்தார், வி.ஏ.ஓ., தேர்தல் ஓட்டுச்சாவடி கண்காணிப்பளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், குமாரபா-ளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார், திட்ட இயக்குனர் வடிவேல், நகராட்சி ஆணையர் ரமேஷ், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தியாகராஜன், தேவராஜ், உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை