உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காரவள்ளியில் பற்றி எரிந்த தீ 13 மணி நேரம் போராடி அணைப்பு

காரவள்ளியில் பற்றி எரிந்த தீ 13 மணி நேரம் போராடி அணைப்பு

‍சேந்தமங்கலம், மகொல்லிமலை அடிவாரம், காரவள்ளி சோதனைச்சாவடியில் ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு வீரர்கள், 13 மணி நேரம் போராடி அணைத்தனர்.கொல்லிமலை அடிவாரம், காரவள்ளியில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் இருந்து மலைக்கு செல்லும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காரவள்ளி சோதனைச்சாவடி அருகே, காய்ந்த மூங்கில் காட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி, 2வது கொண்டை ஊசி வளைவு வரை இரவு முழுதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, கொல்லிமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த, 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள், விடிய விடிய பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தை அதிகாலை, 3:00 மணி வரை தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். 13 மணி நேரம் எரிந்த தீயில் ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் எரிந்து சாம்பலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ