உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளம்பெண் குறித்து அவதுாறு அகாடமி உரிமையாளர் கைது

இளம்பெண் குறித்து அவதுாறு அகாடமி உரிமையாளர் கைது

திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அர்த்தநாரீஸ்வரர் ஐ.ஏ.எஸ்., அகாடமி என்ற பெயரில், சீதாராம்பாளையத்தை சேர்ந்த அஸ்வின், 30, என்பவர் பயிற்சி மையம் நடத்துகிறார். இங்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள் படிக்கின்றனர். சில தினங்களுக்கு முன், அப்பயிற்சி மையத்தில் படிக்க வந்த பெண்ணிடம், இவரது உறவுக்கார பெண்ணின் நடத்தை குறித்து அஸ்வின் அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை, அஸ்வினை சந்தித்து கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், அஸ்வினை பிடித்து திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், அவரின் மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்தனர். அதில் சில பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், போனில் பேசிய பதிவுகள் இருந்தன.இதையடுத்து, பெண்ணின் தந்தை கொடுத்த புகார்படி, திருச்செங்கோடு நகர போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஸ்வினை ஆஜர்படுத்தினர்.நீதிபதி சுரேஷ்பாபு விசாரித்து, அஸ்வினை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை