| ADDED : டிச 04, 2025 06:00 AM
நாமக்கல்: நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. அப்பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், எஸ்.பி., அலுவலம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதன் அருகே, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சட்டக்கல்லுாரி, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷன், மாவட்ட ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதனால் அங்கு பொதுமக்கள், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும், இரண்டு வட்டார போக்குரவத்து அலுவலகங்கள் செல்படுவதால், இளகுரகம், கனரக வாகனங்கள், எப்.சி.,க்காக வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால், '108' அவசரகால ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் தவிப்புக்குள்ளாகின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.