உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஜவகர் சிறுவர் மன்றம் சாதனை

இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஜவகர் சிறுவர் மன்றம் சாதனை

நாமக்கல்: டில்லி தேசிய பாலபவனில், இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு, மூன்று நாட்கள் நடந்தது. அதில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாநாட்டில், நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்-ளப்பட்ட முன்னோடி செயல்பாடுகளை, தன்னம்-பிக்கையுடனும், அறிவியல் சிந்தனையுடனும் விளக்கினர்.மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக பொறுப்-புணர்வு, அறிவியல் சிந்தனை என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்கள் விளக்கம் அளித்-தனர். அவற்றை, நீதிபதிகள், பங்கேற்பாளர்களின் சிறப்பையம், பாராட்டையும் பெற்றது. இதன் மூலம், நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற மாண-வர்கள், தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். இது, நாமக்கல் மாவட்டத்-திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி