உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நல்ல குடும்ப சூழல் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கும்

நல்ல குடும்ப சூழல் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கும்

குன்னுார் : குன்னுார் அருகே கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஆசிரியை அமராவதி வரவேற்றார். தலைமையாசியர் செலின், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள், கல்வியாண்டிற்கான குழு மறு கூட்டம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன் பேசுகையில், ''இன்றைய சமூக சூழலில் குழந்தைகளை நல்ல குடிமக்களாக வளர்ப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அரசு பல திட்டங்களை அமல்படுத்தினாலும் அவற்றின் பலன் குழந்தைகளுக்கு சென்று சேர பெற்றோர், ஆசிரியர்கள் ஒன்றிணைப்பு அவசியம். பள்ளி செயல்பாடுகளை கண்காணிக்க அரசு பல யுக்திகளை கையாண்டு வருகிறது. அதுபோல் நல்ல குடும்பச்சூழல் அமைய பெற்றோர் தங்களை தயார்படுத்தி, சிறந்த குழந்தைகளாக உருவாக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர் என்பதை உணர்ந்து முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டும்,'' என்றார். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ