உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலுார்;பந்தலுார் அருகே, சேரம்பாடி டான்டீ, செக்போஸ்ட் என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. கோவிலில் ஸ்ரீ ஆலய கணபதி, முருகன், துர்க்கை, மகா சக்தி முத்துமாரியம்மன் மற்றும் நவகிரகம் ஆலயங்களில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, 23ஆம் தேதி துவங்கியது. அன்று மாலை முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் அன்று இரவு தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் மற்றும் கோபுர கலசம் வைத்தல், யாக சாலை பூஜை, நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை சர்வ சாதகம் தியாகராஜ குருக்கள் தலைமையிலான குழுவினர், இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச ஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தினர்.தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு தொடர்ந்து அம்மன் அபிஷேகம் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. நாயக்கன் சோலை மாரியம்மன் கோவில் சார்பில் அப்பகுதி பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் சொல் தேவன், பொருளாளர் பொன்னம்பலம், துணை தலைவர் பத்மநாபன், துணைச் செயலாளர், தர்மகர்த்தா முத்துசாமி உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ