| ADDED : ஆக 23, 2024 02:44 AM
கூடலுார்;கூடலுார் புளியாம்பாறை அருகே, சாலையோர வெடிப்பில் தனியார் பள்ளி வாகனம் சிக்கிய சம்பவத்தில், மாணவர்கள் காயமின்றி தப்பினர்.கூடலுார் கோழிக்கோடு சாலையில் இருந்து மரப்பாலம் -புளியம்பாறை சாலை பிரிந்து செல்கிறது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, கூடலுார் தனியார் பள்ளி வாகனம், மாணவர்களுடன், மரப்பாலத்தை கடந்து புளியம்பாறை நோக்கி சென்றது.சாலையில் வளைவான பகுதியை, கடந்து சென்றபோது, சாலையோரத்தில் ஏற்பட்டிருந்த விரிசலில் வாகனத்தின் முன் டயர் சிக்கியதில், தடுப்பு இடிந்து மண் சரிவு ஏற்பட்டது.வாகன ஓட்டுனர் ஷியாபு, கவனமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு மாணவர்கள் தப்பினர். மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்திலிருந்து இறக்கினர். தொடர்ந்து, அப்பகுதியினர் உதவியுடன்,பள்ளி வாகனம் மீட்கப்பட்டது.மக்கள் கூறுகையில், 'சாலையோரத்தில், ஏற்பட்டிருந்த விரிசலில் பள்ளி வாகனம் சிக்கி, மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இப்பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.