உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

பாலக்காடு;பாலக்காடு அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் விஜய், 21. இவர், நேற்று முன்தினம் மாலை இரு நண்பர்களுடன் பாலக்கயம் வட்டப்பாறை அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர்.அப்போது, திடீரென கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால், ஆற்று நீரில் மூழ்கி விஜய் காணாமல் போனார். தகவல் அறிந்த, கல்லடிக்கோடு போலீஸ் மற்றும் மண்ணார்க்காடு தீயணைப்பு படையினர், அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து நடத்திய தேடுதலில், விஜயை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் நடத்திய தேடுதலில், விஜயின் உடலை மீட்க முடிந்தது. அவரது உடல் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை