மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
குன்னுார்;'நீலகிரியில் அழிந்து வரும் அரிய வகை பழங்களை உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கையை தோட்டக்கலை துறை மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுார் பகுதியில் மித வெப்ப காலநிலை நிலவுவதால், பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பு அளிக்கும் வகையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பழ கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை திரளான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். ஆனால், கடந்த காலங்களை ஒப்பிடும் போது, பழ கண்காட்சியில் நீலகிரிக்கு உரித்தான பாரம்பரிய பழவகைகள் குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வீணடிக்க கூடாது
நீலகிரி விவசாயிகள் நல சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில்,'' தோட்டக்கலை துறை ஆண்டுதோறும் நடத்தப்படும் பழகண்காட்சியில், பல்வேறு வடிவமைப்புக்காக பயன்படுத்தப்படும் பல டன் பழங்கள் வீணாகி வருகின்றன. இது விவசாயிகளின் உழைப்பை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.ஏற்கனவே, குரங்கு உட்பட விலங்குளின் பிரச்னையால், மலை மாவட்டத்தில் ஆரஞ்சு,பேரி உள்ளிட்ட பழங்களின் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனை மீண்டும் அதிகரிக்க தோட்டங்களில் சோலார் மின் வேலி அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்து வரும் அரிய வகை பழங்கள்
மேலும், அலங்காரங்களுக்கு பயன்படுத்தபடும் பழங்களை வீணடிக்காமல் இருக்க மாற்று திட்டம் வகுக்க வேண்டும்,'' என்றார்.நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில், அத்தி, நாவல் பேரி, தவிட்டு, இலந்தை, ஊசி, நெல்லி, ஊட்டி ஆரஞ்சு பழங்கள் ஆகியவை அதிகளவில் வளர்க்கப்பட்டன. இங்கு அதிகம் இருந்த 'வால்நட்' மரங்களை காணவில்லை. சர்வதேசளவில் இவற்றுக்கு கிராக்கி இருப்பதால் காஷ்மீர் வால்நட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும். மேலும், பட்டர் புரூட், ரம்புட்டான், மங்குஸ்தான், ஜாதிக்காய். பட்டை, கிராம்பு ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். அழிந்து வரும் அரிய வகை பழங்களை உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கையை தோட்டக்கலை துறை மேற்கொண்டு சிறு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
03-Oct-2025