உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

அன்னூர் : வடுகபாளையம், கோவில் கும்பாபிஷேக ஒன்பதாவது ஆண்டு விழா நேற்று நடந்தது. நாரணாபுரம் ஊராட்சி, வடுக பாளையத்தில், பல நூறு ஆண்டுகள் பழமையான அங்காளம்மன், பேச்சியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா ஒன்பதாவது ஆண்டு விழா நேற்று நடந்தது. புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களை வைத்து யாக பூஜை நடந்தது. விபூதி, மஞ்சள், பால், தண்ணீர், எலுமிச்சை, பன்னீர் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. மதியம் அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. சோமனூர், அன்னூர், கோவை பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை