மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
7 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
7 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
7 hour(s) ago
ஊட்டி: 'முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள வீரர்கள் இம்மாதம், 25ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், இந்த ஆண்டிற்கான தனி நபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசு தொகை,37 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளை பெற முடியும். 25 ம் தேதி கடைசி நாள்
மாநிலம் முழுவதிலிருந்து, 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 வயது முதல் 25 வயது வரை கல்லுாரி மாணவர்கள், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட இம்மாதம், 25ம் தேதி கடைசி நாளாகும். எனவே, விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் https://sdat.tn.gov.inஎன்ற இணைய தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரில் தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago