உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கேரட் விலை உச்சம்; வீழ்ச்சியை நோக்கி பீன்ஸ்

கேரட் விலை உச்சம்; வீழ்ச்சியை நோக்கி பீன்ஸ்

குன்னுார் : நீலகிரியில் கேரட் விலை உயர்ந்த நிலையில், பீன்ஸ் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்கறிகள், மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு அக்., மாதம் அதிகபட்ச விலை கிடைத்த நிலையில் தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கேரட் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கேரட் கிலோ, குறைந்தபட்சம், 70 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 110 ரூபாய் வரை கிடைத்தது. தற்போது, 90 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் பீன்ஸ் கிலோ, 20 முதல் 30 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. கேத்தி விவசாயி ஹரிஹரன் கூறுகையில்,''கடந்த ஏப்., மே மாதங்களில் கடும் வெப்பத்தின் காரணமாகவும், போதிய தண்ணீர் கிடைக்காமலும் கேரட் விதை விதைப்பது குறைந்தது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் இருந்து காய்கறி மண்டிகளுக்கு வரும் கேரட் வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக கேரட் விலை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தொடர்ந்து நீடிப்பதுடன், விலை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. பீன்ஸ் வரத்து அதிகரித்த நிலையில் விலை குறைந்துள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை