| ADDED : ஆக 12, 2024 02:28 AM
கோத்தகிரி:கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் சாலையில், காட்டெருமைகள் அடிக்கடி 'டேரா' போடுவதால், டிரைவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி நகரப்பகுதியில் சமீப காலமாக விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நடமாடுவது தொடர்கிறது.குறிப்பாக, கோத்தகிரி ராம்சந்த் - கன்னேரிமுக்கு இடையே, மிஷன் காம்பவுண்ட் சாலையில், காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான நேரங்களில், காட்டெருமைகள் கூட்டமாக சாலையில் நின்று விடுவதால், டிரைவர்கள் அச்சத்திற்கு இடையே, வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சாலையின் நடுவில், காட்டெருமைகள் நின்ற நிலையில், அவசர தேவைக்காக, 'பிக்-அப்' வாகனத்தை ஓரத்தில் ஒதுங்கிய போது, ஆவேசமாக காட்டெருமைகள் துரத்தியுள்ளன.சுதாரித்து கொண்ட டிரைவர், மிக சாதுர்யமாக வாகனத்தை இயக்கி தப்பிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.மக்கள் கூறுகையில், 'இச்சாலையில், பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ளதுடன், வாகன இயக்கம் அதிகமாக உள்ளதால், காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்,' என்றனர்.