மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
9 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
9 hour(s) ago
கூடலுார் : கூடலுாரில் பழக்கடை வியாபாரி பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் நகரின் மையப்பகுதியில், சாலையோர பழக்கடையில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையில், எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம் மற்றும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பழக்கடை வியாபாரி சாகுல் ஹமீது, 48, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவரிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில்,'கூடலுார் வடவயல் பகுதியை சேர்ந்த பிஜூ,47, என்பவர், கர்நாடக, கேரளாவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில்,'கைது செய்யப்பட்டுள்ள பிஜூ பலருக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கு உள்ளது.ஆந்திரமாநிலம், அனுக்கா பள்ளி பகுதியில் கஞ்சா வியாபாரத்தில், 74 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பயன்படுத்திய வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது. இதனால், பிஜூவிடம் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago