மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் நடப்பு ஆண்டு ஏப்., வரை கோடை மழை பெய்யாததால் வனப்பகுதி பசுமை இழந்தும், நீர்நிலைகள் நீர்வரத்து இன்றி வறண்டது. வனவிலங்குகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வன ஊழியர்கள் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று 'சிமென்ட்' தொட்டிகளில் ஊற்றி வந்தனர்.உணவு பற்றாக்குறை நாள் யானைகள் குடிநீர் தேடி இடம் பெயர்ந்தது. தொடர்ந்து, வறட்சியின் தாக்கம் அதிகரித்து. வனத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து பாதிக்கப்பட்டதால் வனத்துறையினர் கவலையடைந்தனர். இந்நிலையில், மே மாதம் கோடை மழை துவங்கி, வனப்பகுதி பசுமைக்கு மாற துவங்கியது. வனத்தீ ஆபத்தும் நீங்கியது. தொடர்ந்து, கடந்த மாதம் துவங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மாயாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.ஒம்பட்டா, கேம்பட் உள்ளிட்ட தடுப்பணைகள், நீர் குட்டைகள், சிறிய தடுப்பணைகள் நிரம்பி உள்ளது. வனவிலங்குகளின் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கி உள்ளதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையினால், நீர் ஆதாரங்கள் நிரம்பி, வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கி உள்ளது. கோடையில் உணவு குடிநீர் தேடி இடம்பெயர்ந்த வனவிலங்குகளும் மீண்டும் முதுமலைக்கு திரும்பியது நிம்மதி அடைய செய்துள்ளது,' என்றனர்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025