உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி - ஊட்டி சாலையில் அபாய மரங்கள் வெட்டும் பணி

கோத்தகிரி - ஊட்டி சாலையில் அபாய மரங்கள் வெட்டும் பணி

கோத்தகிரி;கோத்தகிரி - ஊட்டி இடையே, அபாய மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோத்தகிரி - ஊட்டி சாலையில், கார்ஸ்வுட் சாலை ஓரத்தில் அபாய மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மழை நாட்களில், இந்த மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகம் அபாய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, இதுவரை, 300க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதில், விழும் நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்படாமல், சோலைக்குள் உள்ள தேவையில்லாத மரங்கள் மற்றும் அழகாக காணப்பட்ட சாம்பிராணி மரங்களும் அகற்றப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின், கார்ஸ்வுட் பகுதியில் சாலை ஓரத்தில் விழும் நிலையில் உள்ள வானுயர்ந்த கற்பூர மரங்கள் மட்டும் அகற்றப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை