உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடும் வறட்சி நிலவும் காலம் குடிநீருக்கு சிரமப்படும் பழங்குடியினர்

கடும் வறட்சி நிலவும் காலம் குடிநீருக்கு சிரமப்படும் பழங்குடியினர்

கூடலுார் : 'கூடலுார் புளியம்பாறை கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, பழங்குடியினர் வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார் புளியம்பாறை ஒட்டி கோழிகொல்லி பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், குடியிருப்பு இரண்டு பகுதிகளாக உள்ளது.அதில் ஒரு பகுதியில் உள்ள பழகுடியினருக்கு குடிநீர் குழாய் அமைத்து, தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.அதன் மற்றொரு குடியிருப்பு பகுதியில், 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் இதுவரை தண்ணீர் வரவில்லை.இதனால், கிராம மக்கள் அங்குள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, சுமந்து சென்று அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கடும் வறட்சி நிலவுவதால், கிணற்றிலும் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், குடிநீருக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில், குடிநீர் சப்ளை செயப்படுவதில்லை. தற்போது, குடிநீர் எடுக்க பயன்படுத்தி வரும் கிணற்றிலும் போதுமான நீர் இருப்பு இல்லை. இதனால் குடிநீருக்கு சிரமப்பட வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை