உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டு வாசலுக்கு வந்த யானை பயிர்கள் சேதம்

வீட்டு வாசலுக்கு வந்த யானை பயிர்கள் சேதம்

பந்தலுார்;பந்தலுார் அருகே குந்தலாடி தானிமூலா பகுதிக்கு கடந்த சில நாட்களாக காட்டு யானை வந்து செல்கிறது. நேற்று முன்தினம் இரவு கிராமத்திற்கு வந்த யானை, ராஜூ என்பவரின் வீட்டு வாசலுக்கு வந்துள்ளது. வாசலில் யானையை பார்த்தவர்கள் வீட்டினுள் முடங்கினர். அங்கிருந்த தோட்டத்தில் விவசாய பயிர்கள் மற்றும் பூந்தோட்டத்தை சேதப்படுத்திய யானை அதிகாலை அங்கிருந்து தேயிலை தோட்டம் வழியாக சென்றது. இதுகுறித்து பிதர்காடு வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மக்கள் கூறுகையில்,' அப்பகுதியில் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்