மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
7 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
7 hour(s) ago
குன்னுார்;நீலகிரி தேயிலை விவசாயி ஒருவரின் மகன் கர்நாடகா மாநில அளவிலான கால்பந்து அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தும்மனட்டி அருகே டி. மைனலா கிராமத்தை சேர்ந்தவர் குமார், பிரியா தம்பதியின் மகன் தீக்ஷித்,15. இவர் தற்போது பெங்களூரு, 'கிட் ஸ்டார்ட் கிளப்' பள்ளியில். 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சத்தீஸ்கரில் நடந்து வரும் தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடக கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரது தந்தை குமார் கூறுகையில்,''கால்பந்தில் தீவிரம் ஆர்வம் கொண்ட இவர், பள்ளியில் நடந்த பல்வேறு கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் சான்றிதழ்களையும் வென்றுள்ளார். தற்போது, கர்நாடக அணிக்காக இவர் தேர்வு செய்யப்பட்டு, நீலகிரிக்கு பெருமை சேர்ந்துள்ளார்,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago