மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
பந்தலூர் : பந்தலுாரில் இலவச தையல் 'எம்பிராய்டரி' பயிற்சி நடந்து வருகிறது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில், 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்றார். மூத்த தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனா துவக்கி வைத்து பேசுகையில், ''பெண்களுக்கு எளிதாக வருவாய் பெற்று தரும் தொழிலாக தையல் பணி உள்ளது. ஒருவர் தனியாக இந்த பணியை செய்வதை விட கூட்டாக சேர்ந்து ஈடுபடுவதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும். பயிற்சி கொடுக்கும்போது அதனை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்,''என்றார். கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''தையல் பயிற்சியை பெறுவதன் மூலம் பெண்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். அதில், 'எம்பிராய்டரி' பணிகளும் சிறப்பு சேர்க்கும். அரசு மூலம் இதற்கான உதவிகள் வழங்கும் நிலையில், அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள பெண்கள் முன் வர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சியினை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். மாணவி பிரியா நன்றி கூறினார்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025