உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் கஞ்சா விற்பனை: ஒரே மாதத்தில் 11 பேரை சுற்றி வளைத்த போலீசார்

குன்னுாரில் கஞ்சா விற்பனை: ஒரே மாதத்தில் 11 பேரை சுற்றி வளைத்த போலீசார்

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி.,உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., குமார் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீசார், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் அடக்கிய தனிப்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், பழத்தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியவரை பிடித்து விசாரித்ததில் அவர் ஐ.டி.ஐ. மாணவர் என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பிரதாப், 45, விஷ்ணு,21, ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து, குன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மொத்தம், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.போலீசார் கூறுகையில், 'ஆந்திரா மாநிலம் மற்றும் தேனி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கஞ்சா கொண்டு வந்து, இந்த குழுவினர் மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளனர். 50 கிராம் வரை, 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்,' என்றனர்.குன்னுாரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் குன்னுார் தனிப்படை குழுவினருக்கு, போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ