உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணம் இல்லா பரிவர்த்தனையில் இடுபொருட்கள் பெறலாம்

பணம் இல்லா பரிவர்த்தனையில் இடுபொருட்கள் பெறலாம்

மேட்டுப்பாளையம்;வேளாண் கிடங்கில் விதைகள், கம்பு, ராகி, கொள்ளு, தட்டைப்பயிறு, நிலக்கடலை, உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், சூடோமோனஸ் மற்றும் நுண்ணூட்டங்கள் ஆகிய இடுபொருட்கள், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடுபொருட்களை வாங்க விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்திற்கு வரும்போது, பணம் எடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உடன், தங்களது ஆதார் எண், சிட்டா நகல், ஏ.டி.எம்., கார்டு, கிரிடிட் கார்டு, யு.பி.ஐ., வசதி மற்றும் பிற இணைய சேவைகளை பயன்படுத்தி, பணம் இல்லா பரிவர்த்தனை முறையில், இடுபொருட்களை வாங்கிச் செல்லலாம். புதிய மின்னணு தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி, இடுபொருட்களை பெற்றுச் செல்லலாம். இவ்வாறு காரமடை வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை