மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
18 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
18 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
18 hour(s) ago
ஊட்டி : நீலகிரியில் பெய்து வரும் கன மழையால், ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு மலை காய்கறி வரத்து குறைந்துள்ளது.ஊட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பயிரிடப்படும் மலை காய்கறிகள், அறுவடைக்கு பின், ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு விற் பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து மலை காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழைக்கு அறுவடைக்கு தயாரான மலை காய்கறிகளை எடுத்து வாகனங்களில் கொண்டு வர சிரமம் ஏற்பட்டு வருவதை அடுத்து மலை காய்கறி அறுவடை குறைந்துள்ளது. சராசரியாக, 25 டன் வரை மலை காய்கறிகள் ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த இரு நாட்களாக கன மழையால், 20 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மழை ஓய்ந்த பின், மலை காய்கறி வரத்து மீண்டும் அதிகரிக்க கூடும் என, மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago