உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை ஏலத்தில் ஏறுமுகம் விற்பனை அதிகரிப்பு

தேயிலை ஏலத்தில் ஏறுமுகம் விற்பனை அதிகரிப்பு

குன்னூர்;நீலகிரியில் தேயிலை ஏலத்தில் வரத்து; விற்பனை அதிகரித்ததால் ஒரே வாரத்தில், 3.03 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது.நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக உள்ள தேயிலை துாள் உற்பத்தி இந்த ஆண்டு துவக்கத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் உற்பத்தி அதிகரித்ததுடன் விலையும் உயர்ந்தது.மழையை தொடர்ந்து அவ்வப்போது சூரிய ஒளியும் பசுந்தேயிலை மகசூலுக்கு உகந்ததாக உள்ளது. தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உள்ளதால், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 26வது ஏலத்தில், தேயிலை துாள் வரத்து மற்றும் விற்பனை உயர்ந்தது.இந்த ஏலத்தில், 13.73 லட்சம் கிலோ இலை ரகம்; 4.60 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 18.33 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. '12.70 லட்சம் கிலோ இலை ரகம்; 4.22 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 16.92 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 18.84 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 111.29 ரூபாய் என இருந்தது. அனைத்து ரக தேயிலைகளுக்கும் சராசரி விலை, கிலோ, 100 ரூபாய் அதிகமாகவே ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த ஏலத்தில், 2.32 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. விற்பனையிலும், 3.90 லட்சம் கிலோ அதிகரித்தது. கிலோவுக்கு, 2 ரூபாய் விலை சரிந்தது. சராசரி விலை குறைந்த போதும், மொத்த வருமானம், 4.02 கோடி ரூபாயாக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி