உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காயத்துடன் சிறுத்தை உலா: வனத்துறை கண்காணிப்பு

காயத்துடன் சிறுத்தை உலா: வனத்துறை கண்காணிப்பு

கூடலுார்:கூடலுார் அஞ்சு குன்னு பகுதியில் சிறுத்தை காயத்துடன், உலா வருவதாக மக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.கூடலுார் பகுதியில் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனினும், அரிதாகவே தென்படும். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு கூடலுார் அஞ்சுகுன்னு அருகே, சாலையில் சிறுத்தை நடந்து செல்வதை சிலர் பார்த்துள்ளனர்.அதனை,வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணித்து சிறுத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'தகவல் கிடைத்தவுடன் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சிறுத்தை ஏதும் தென்படவில்லை. தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணித்து, சிறுத்தையை தேடி வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி