உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேற்றில் சிக்கிய காட்டு யானை மூச்சு திணறி உயிரிழந்ததாக தகவல்

சேற்றில் சிக்கிய காட்டு யானை மூச்சு திணறி உயிரிழந்ததாக தகவல்

கூடலுார்;கூடலுார் அருகே சேற்றில் சிக்கிய காட்டு யானை மூச்சு திணறி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் உணவு தேடி வந்த காட்டு யானை, தேன்வயல் அருகே தனியார் வாழை தோட்டத்தில், சேற்றில் சிக்கி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தது.வனத்துறையினர் அதன் உடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொக்லின் உதவியுடன், சேற்றில் யானையின் உடலை, மாலையில் மீட்டனர். மாலை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தில், மாலை பிரேத பரிசோதனை செய்யவில்லை.தொடர்ந்து, நேற்று, கூடலுார் வன அலுவலர் வித்யா(பொ), வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், ஓவேலி அரசு கால்நடை டாக்டர் நந்தினி, கொளப்பள்ளி அரசு கால்நடை டாக்டர் சவுமியா யானையின் உடலை நேற்று பிரேத பரிசோதனை செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் காட்டு யானைக்கு,35, இருக்கும். சேற்றில் சிக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை