மேலும் செய்திகள்
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
வன்கொடுமைக்கு எதிர்ப்பு
7 hour(s) ago
இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு
7 hour(s) ago
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
7 hour(s) ago
கூடலுார்;கூடலுார் நுகர்பொருள் வாணிப கழக குடோன் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் நர்த்தகி அருகே நுகர்பொருள் வாணிப கழக குடோன் உள்ளது. இங்கிருந்து, கூடலுார் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கடைகளுக்கும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சப்ளை செய்து வருகின்றனர்.இந்த குடோனுக்கு, ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்து இறக்கும் லாரிகளும்; குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு, ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்ல வரும் வாகனங்களும் பயன்படுத்த, குடோன் வளாகத்தை சுற்றி சாலை அமைத்துள்ளனர். இந்த சாலை, சேதமடைந்து, தற்போது சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதில், நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்கவும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஓட்டுனர்கள் கூறுகையில்,'குடோன் வளாகத்தில் உள்ள சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக இருப்பதால் வாகனங்கள் இயக்க சிரமமாக உள்ளது. எனவே, குடோன் வளாகத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago