உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் கிங்ஸ் பெட்டாலியன் வெற்றி

வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் கிங்ஸ் பெட்டாலியன் வெற்றி

ஊட்டி;ஊட்டியில் வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயத்தில் 'கிங்ஸ் பெட்டாலியன்' குதிரை வெற்றி பெற்றது.ஊட்டியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குதிரை பந்தயம் நடந்து வருகிறது. நேற்று, காலை, 11:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மொத்தம், 7 பந்தயங்கள் நடந்தது. வனத்துறை கோப்பைக்கான குதிரை பந்தயம் நடந்தது. இதில், 1400 மீ., இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங்ஸ் பெட்டாலியன்' குதிரை, 1:28.53 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் பங்கேற்று பரிசு வழங்கினார். திரளான சுற்றுலா பயணியர் குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மே முதல் வாரத்தில் முக்கிய பந்தயமான 'டர்பி' மற்றும் நீலகிரி தங்க கோப்பைக்கான குதிரை பந்தயம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்