உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் வளர்ச்சி பணிகள்: நகராட்சி நிர்வாக செயலர் ஆய்வு

குன்னுாரில் வளர்ச்சி பணிகள்: நகராட்சி நிர்வாக செயலர் ஆய்வு

குன்னுார்;நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி சார்பில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் நேற்று ஆய்வுமேற்கொண்டார். தொடர்ந்து, மார்க்கெட் மற்றும் குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் அமைப்பது உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை வசூலிப்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, குப்பை மேலாண்மை பூங்கா உட்பட பல்வேறு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். பின், ரேலியா அணை பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவருடன், நகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்