உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு

கோத்திகிரி;கோத்தகிரி செடிக்கல் கிராமத்தில் புதிய பாரத எடுத்தறிவுத் திட்ட கணக்கெடுப்பு பணி நடந்தது.மாநிலத்தில், 15 வயதிற்கு மேற்பட்டு, 80 வயது வரை பள்ளி இடை நிற்றவர்களும், பள்ளியில் இதுநாள் வரை சேராதவர்களும் பயன் பெறும் வகையில், தமிழக அரசு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2022 முதல் 2027 வரையிலான, 5 ஆண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் நுாறு சதவீதம் எழுத்தறிவு பெறுவது இதன் நோக்கம்.இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், பொறுப்பாளர்கள் சந்தோஷ், ராஜ்குமார், சத்யா, ஹேரி உத்தம் சிங், கடசோலை தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர், கோத்தகிரி செடிக்கல் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று, 27 கற்போரையும், தன்னார்வலர்களாக சிவரஞ்ஜினி மற்றும் சரண்யா ஆகியோரையும் கண்டறிந்து வழிகாட்டுதல் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ