மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
13 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
13 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
13 hour(s) ago
ஊட்டி'ஊட்டி நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஊட்டி சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உள்ளது. நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் தனியார் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஊட்டி நகரில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவு வாகன நிறுத்தும் வசதி இல்லை. இதனால்,போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. போக்குவரத்து போலீசார், நெரிசலை கட்டுப்படுத்த, திணறி வருகின்றனர். இந்நிலையில், நகர சாலைகளில், குறிப்பாக, ஐந்து லாந்தர் பகுதியில், கால்நடைகள் உலா வருவது தொடர்கிறது. சில நேரங்களில், அவை கூட்டமாக நீண்ட நேரம் சாலையில் படுத்து விடுவதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. தவிர, மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இப்பகுதியில், பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருப்பதால், மக்கள் சிரமத்திற்கு இடையே, நடந்து செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது.சமீபத்தில் நகராட்சி நிர்வாகம், கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வெளியிட்ட அறிவிப்பில், 'நகராட்சி ஊழியர்களை பணியமர்த்தி, கால்நடைகளை பிடித்து, காந்தள் 'பவுண்டில்' அடைப்பது; அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது,' உள்ளிட்ட, அறிவிப்பு வெளியிட்டும், இதுவரை நடைமுறை படுத்தவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, சர்வதேச சுற்றுலா மையமான ஊட்டியில், வாகனங்கள் இடையூறின்றி சென்றுவர கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago