உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செம்மண் வயல் கிராமம் மின் சப்ளை பாதிப்பு

செம்மண் வயல் கிராமம் மின் சப்ளை பாதிப்பு

பந்தலுார்: பந்தலுார் அருகே செம்மண் வயல் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு மின் சப்ளை செய்வதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல் உள்ளது. குறைந்த மின்னழுத்தத்தால் 'எலக்ட்ரானிக்' பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்களும் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பெரும்பாலான நேரங்களில் இந்த கிராமத்திற்கு மட்டும் மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. எனவே, இந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து மின் வசதியை முறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ