உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்களுடன் முதல்வர் இன்று முகாம்

மக்களுடன் முதல்வர் இன்று முகாம்

அன்னுார்:கொண்டையம் பாளையம் மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சிகளில், இன்று (20ம் தேதி) 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடக்கிறது. 'மக்களுடன் முதல்வர்' முகாம், வருகிற செப் 14 ம் தேதி வரை, கோவை மாவட்டத்தில், 62 இடங்களில் நடைபெறுகிறது. அன்னுார் தாலுகாவில், ஐந்து முகாம்கள் முடிந்துவிட்டன. ஆறாவது முகாம் இன்று (20ம் தேதி) கொண்டையம்பாளையம் ஊராட்சி, ஆறுவ செட்டிபுதூரில் உள்ள ஆசியன் பொறியியல் கல்லூரி வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. இம்முகாமில், கொண்டையம் பாளையம் மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சி மக்கள் தங்கள் கோரிக்கைகளை, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். 'முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை காவல்துறை உள்ளிட்ட 17 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 44சேவைகள் முகாமில் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த இருஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்,' என எஸ்.எஸ்.,குளம் ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ