உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை பொருள் பயன்படுத்துவோர் விபரம் தெரிவியுங்கள்: ரகசியம் காக்க போலீசார் உறுதி

போதை பொருள் பயன்படுத்துவோர் விபரம் தெரிவியுங்கள்: ரகசியம் காக்க போலீசார் உறுதி

குன்னுார் : 'போதைப் பொருள் பயன்படுத்துவோர் குறித்த விபரங்களை தெரிவிக்க மாணவர் சமுதாயம் முன் வந்தால் ரகசியம் பாதுகாக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூன், 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி தேசிய மாணவர் படை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி குன்னுார் சிம்ஸ் பூங்கா பகுதியில் விழிப்புணர்வு தெரு நாடகம் நடந்தது.போதை பொருட்களால் பள்ளி, கல்லுாரி மாணவ சமுதாயம் வாழ்க்கை சீர்குலைவது பெற்றோர் அடையும் மன உளைச்சல் குறித்து மாணவியர் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். அப்பர் குன்னுார் போலீசாரும் நாடகத்தில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேல் குன்னுார் இன்ஸ்பெக்டர் ரவி பேசுகையில், ''போதை பொருட்கள் விற்பவர்களை அடையாளம் காட்டுவதில் மாணவ மாணவிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. போதை பொருள் பயன்படுத்துவோர் குறித்து உடனடியாக காவல்துறையின், 100 மற்றும் காவல் நிலைய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும். தகவல் கொடுப்பவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.கல்லுாரி, என்.சி.சி., அலுவலர் சிந்தியா பேசுகையில், ''போதை பொருளால் பல குடும்பங்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளன. மரணத்தின் வாசலுக்கு கொண்டு செல்லும் போதை பொருளை தடுப்பது அனைவரின் முதல் கடமை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை