உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நோய் பரவும் அபாயம்

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நோய் பரவும் அபாயம்

ஊட்டி;ஊட்டி லோயர் பஜாரில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊட்டி லோயர் பஜார் பகுதியில் ஏராளமான குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு காந்தள், ஏக்குணி, சோலூர், பிங்கர்போஸ்ட் வழித்தடத்திற்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கிறது. ஏராளமான மக்கள் இப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையம் எதிரே, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கொசு தொல்லை, புழு பூச்சிகள் நெளிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பயணியர் பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, இப்பகுதியை துாய்மையாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை