மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
20 hour(s) ago
பந்தலுார் : போராட்டத்திற்கு பின்னர், 'டான்டீ' தொழிலாளர்களுக்கு மட்டும் நேற்று சம்பளம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகமான, 'டான்டீ' நீலகிரி மற்றும் வால்பாறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 4,100 தொழிலாளர்கள் மற்றும் 182 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.'கடந்த காலங்களில் முதல் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம், 5- முதல் 7-ம் தேதி,' என, மாற்றப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக, 10 தேதி வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததுடன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முதல் மாத சம்பளம் அடுத்த மாதம் வழங்கும் நிலைக்கு 'டான்டீ' நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நேற்று முன்தினம் காலை வரை சம்பளம் வழங்கப்படாத நிலையில், தொழிலாளர்கள் அந்தந்த கோட்ட அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதியம், 11:00 மணிக்கு தொழிலாளர்கள் வங்கி கணக்குகளில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. ஆனால், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், அன்றாட தேவைகளுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'டான்டீ நிர்வாகம், ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்,' என்றனர்.
20 hour(s) ago