உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் மழை நீர்: சிரமப்படும் பயணிகள் நாள்தோறும்

புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் மழை நீர்: சிரமப்படும் பயணிகள் நாள்தோறும்

கூடலுார் : கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழை நீரால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனை கட்டுமான பணிகள் நடந்தது. பிப்., 25ம் தேதி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். எனினும், பஸ் ஸ்டாண்டில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக, பல பஸ்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கும் மழை நீரால், பஸ்கள் இயக்கவும், பயணிகள் பஸ்சில் ஏறி, இறங்கி செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கையாக இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முழுமை பெறாமல், திறந்து செயல்பட்டு வருகிறது. பழைய பணிமனை பகுதியை, பஸ் ஸ்டாண்டாக விரிவுபடுத்த இதுவரை நடவடிக்கை இல்லை. தற்போது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் மழை நீரால், பயணிகள் மட்டுமின்றி ஓட்டுனர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, அப்பகுதி சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ