உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வன விலங்குகளுக்கு குடிநீர் சப்ளை; வனத்துறைக்கு புதிய வாகனம்

வன விலங்குகளுக்கு குடிநீர் சப்ளை; வனத்துறைக்கு புதிய வாகனம்

கூடலுார் : முதுமலை மசினகுடி பகுதியில், கோடை காலத்தில், வனவிலங்குகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய, புதிய வாகனம் வழங்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்தில் கோடையில் வறட்சியின் தாக்கம் அதிகமாக காணப்படும். வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.வனத்துறையினர் மாயார் ஆற்றில் இருந்து வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, வறட்சியான பகுதிகளில் உள்ள சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டு, கோடை மழையும் ஏமாற்றி வருவதால், கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வனப்பகுதி பசுமை இழந்துள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வாகனங்களில், தண்ணீர் எடுத்து சென்று சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர். இதற்காக, மசினகுடி கோட்டத்தில், வாடகை வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தீர்வாக, கோடை காலத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் சப்ளை செய்யவும், மற்ற காலங்களில் பிற தேவைக்கு பயன்படுத்த கூடிய புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'வனத்துறைக்கு சொந்தமாக வழங்கப்பட்டுள்ள புதிய வாகனத்தில், இரும்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, வறட்சியான வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் தேவையான குடிநீர் சப்ளை செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை