மேலும் செய்திகள்
கொட்டும் மழையிலும்பள்ளிக்கு சென்ற குழந்தைகள்
57 minutes ago
ஏலமன்னாவில் அபாய மரங்கள் அகற்றம்: வாகன ஓட்டிகள் நிம்மதி
57 minutes ago
பந்தலுார் : கூடலுாரில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் செல்லும் சாலையில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் குழிகள் ஏற்பட்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது.இந்த வழியாக வந்து செல்லும் வெளியூர், வாகன ஓட்டுனர்கள் குழிகள் இருப்பது தெரியாமல் வேகமாக வந்து, விபத்தில் சிக்குவதுடன் வாகனங்களும் பழுதடைகிறது.இதனால், சாலையை சீரமைக்க வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியதுடன், இப்பகுதி மக்களும் வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செவிமடுக்கவில்லை.இந்நிலையில், இந்த பகுதியில் டீ கடை நடத்தி வரும், இந்திராணி,65, என்ற மூதாட்டி சாலையை சீரமைக்க களம் இறங்கினார். வீட்டிலிருந்து கற்களை கொண்டு வந்து, குழிகளில் நிரப்பி சீரமைத்தார்.மக்கள் கூறுகையில், 'சாலையை சீரமைக்க வார்டு கவுன்சிலர்; இளைஞர்கள் முன்வராத நிலையில் மூதாட்டி ஒருவர் இந்த சமூக பணியில் ஈடுபடுவது, இளையோருக்கு முன் உதாரணமாக உள்ளது,' என்றனர்.
57 minutes ago
57 minutes ago