உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பு இருளில் மூழ்கிய கிராம மக்கள் அவதி

மின் சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பு இருளில் மூழ்கிய கிராம மக்கள் அவதி

கூடலுார்;மசினகுடி, சிங்கார மின் நிலையத்துக்கு மின் சப்ளை தடைப்பட்டு, கூடலுார், பந்தலுார் பகுதி கிராமங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார், முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமடைந்துள்ள பருவ மழையில், மரங்கள் விழுந்து, அடிக்கடி மின் சப்ளை தடைபடுகிறது. மின் ஊழியர்கள் சீரமைத்து மின் சப்ளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் பல பகுதிகளில் மின்சப்ளை இல்லை. மதியம் மின் சப்ளை வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு மீண்டும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், 'சிங்கார மின் நிலையத்துக்கு, 110 கே.வி., மின் சப்ளை செய்யும் இரண்டு லைன்களும் பழுது ஏற்பட்டதால், இரவு கூடலுார், பந்தலுார் பகுதிக்கு மின் சப்ளை இருக்காது; அதனை சீரமைத்து மின் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், மின் சப்ளை இன்றி கிராமப்பகுதிகள் இருளில் மூழ்கின. நேற்று மதியம் வரை மின் சப்ளை வழங்கப்படவில்லை. பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'கூடலுார், பந்த லுார் பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.அவைகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, இரவில் தடையின்றி மின் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை