உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் மசினகுடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் மசினகுடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

கூடலுார், :முதுமலை தெப்பக்காடு தரைப்பாலம் ஆற்று நீரில் மூழ்கியதால், தெப்பக்காடு -மசினகுடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு அருகே, மசினகுடி சாலையில் மாயார் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த பாலத்துக்கு மாற்றாக, புதிய பாலம் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.மக்களின் வாகன போக்குவரத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான தற்காலிக சாலையை வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். பணிகள் துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை நிறைவு பெறவில்லை.இந்நிலையில், முதுமலை மாயார் ஆற்றில் நேற்று மதியம் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்காலிக பாலம் மூழ்கியது. தெப்பக்காடு -மசினகுடி இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பாலத்தின் இருபுறமும் நிறுத்தப்பட்டது. இதனால், தெப்பக்காடு யானைப்பாடி கிராமம், மாயார், சிங்கார, வாழை தோட்டம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை, நெடுஞ்சாலை, வனத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொக்லைன் மூலம் அடைப்புகளை அகற்றினர். மாலையில் பாலத்தின் மீது மழை வெள்ளம் செல்வது சற்று குறைந்ததை தொடர்ந்து வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை