உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரு வீடுகள் சேதம் : முகாமில் 27 பேர்

இரு வீடுகள் சேதம் : முகாமில் 27 பேர்

குன்னுார்:குன்னுாரில் நள்ளிரவில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக பலர் உயிர் தப்பினர்.குன்னுாரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்த நிலையில், விரட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாரத் நகர் பகுதியில் பெரியளவிலான மரம் செல்லம்மாள் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளின் மீது விழுந்தது. வீடுகள் சேதம் அடைந்தது. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நள்ளிரவில் தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஆய்வு மேற்கொண்ட ஊராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 27 பேரை அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.மேலும், கரடிபள்ளம், கூர்கா கேம்ப் கல்குழி உட்பட ஏழு இடங்களில் விழுந்த மரங்களை, 9 மணி நேரத்திற்கு மேல் போராடி குன்னுார் தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.இதேபோல, பல இடங்களிலும் மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததில் குன்னுார் பகுதியில் நள்ளிரவு முதல் பல மணி நேரம் மின்தடை நீடித்தது. மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுத்து மின்வினியோகத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி