உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் ரயில் நிலையத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

குன்னுார் ரயில் நிலையத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

குன்னுார்;'குன்னுார் மலை ரயில் நிலையத்தில் பழமையான மரத்தை பாதுகாக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் பார்க்கிங் வசதிகளுடன் மறு வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரத்தை சுற்றி மண் தோண்டப்பட்டுள்ளது. மரம் வெறும் அபாயத்தில் உள்ளது.மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,''அழகான பழமை வாய்ந்த இந்த மரத்தை பாதுகாக்க, தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பழைய மரத்தின் அழகை தக்க வைக்க, 10 சதுர அடி நிலத்தில் போதுமான இடம் உள்ள நிலையில் மரத்தை பாதுகாக்க அதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பு நிறுவனத் தலைவர் சிவதாஸ் கூறுகையில, ''ரயில் நிலையத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த காட்டுமரம் ஆக்சிஜன் மற்றும் நிழல் தரும் மரமாக உள்ளது. பறவைகள் வந்து அமரக்கூடிய வாழ்விடமாகவும் உள்ளது. இந்த மரத்தை வெட்ட அனுமதிக்க கூடாது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ